logo
பவானி அருகே நாய் கடித்ததில் மூதாட்டி வளர்த்து வந்த ரூ. 2லட்சம் மதிப்பிலான ஆடுகள் உயிரிழப்பு.

பவானி அருகே நாய் கடித்ததில் மூதாட்டி வளர்த்து வந்த ரூ. 2லட்சம் மதிப்பிலான ஆடுகள் உயிரிழப்பு.

13/Apr/2021 07:11:44

ஈரோடு ஏப்: ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள ஜம்பை பேரூராட்சிக்குள்பட்ட நல்லி பாளையத்தில் நாய் கடித்ததில் மூதாட்டி வளர்த்து வந்த ரூ. 2லட்சம் மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்தன.

நல்லிப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில்  செம்மறி ஆடுகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு கண்னையன் என்பவரது பட்டியில் வளர்த்து வந்த 7ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தன.

 அதேபோல் இன்று அதே பகுதியில் மூதாட்டி பூர்ணம் என்பவர் வாழ்வாதாரமாக வளர்த்து வந்த 25-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை பாதுகாத்து வைத்திருந்த பட்டியில்  திங்கள் கிழமை  இரவில் மர்ம விலங்கு  புகுந்து  கடித்து கொண்டிருந்த போது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த மூதாட்டி சப்தமிட்டதில்  மர்ம விலங்கு அங்கு தப்பியோடியது. இதை யடுத்து பட்டியில் இருந்த 12ஆடுகள்  உயிரிழந்து விட்டன.


இதன் பின்னர் மூதாட்டி பூரணம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் வனத்துறையினர் உயிரிழந்த ஆடுகளில் தடயங்கள் சேகரித்து சோதனை நடத்தியதில் ஊர் நாய் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது.

இருப்பினும் மூதாட்டி ஆதரவின்றி கால்நடைகளை கொண்டு வாழ்வதாரம் நடத்தி வந்த நிலையில் ரூ.2லட்சம்  மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.மேலும் தொடர்ந்து இந்த பகுதியில் நாய் கடித்து ஆடுகள் உயிரிழந்து வருவதை தவிர்க்க வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top