logo
இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 16 பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு

இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 16 பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு

24/Dec/2020 06:44:54

ஈரோடு, டிச: உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்து அதிகரித்தது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண கொரோனா  பாதிப்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இது அதி வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டுக்கான விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி உள்ளது இந்தியாவிலும் இங்கிலாந்து விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பியவர்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழக சுகாதாரத் துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி கடந்த 15-ஆம் தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து ஈரோடு வந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் கண்டெடுத்தனர். அப்போது 16 பேர் இங்கிலாந்திலிருந்து ஈரோடுக்கு வந்து இருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது

சுகாதார துறை அறிவுறுத்தலின் பெயரில் இங்கிலாந்தில் இருந்து கடந்த 15-ஆம் தேதி முதல் நேற்று வரை ஈரோடுக்கு வந்த 16 பேர் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்துள்ளனர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடுக்கு வந்துள்ளனர் அவர்கள் 16 பேரும் கொரோனா  பரிசோதனை செய்துகொண்டு நாடுதிரும்பியுள்ளனர் அவர்களுக்கு நெகட்டிவ் சான்றிதழ் வந்துள்ளது இருந்தாலும் இங்கிலாந்தில் தற்போது பரவி ஒரு புதிய வகை கொரோனா தொற்று காரணமாக 16 பேருக்கு மீண்டும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில்  அவர்களுக்கு தொற்று இருந்தால்  அந்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது எந்தவகையான கொரோனா  என்ன கண்டறியப்படும். தற்போது இங்கிலாந்தில் இருந்து ஈரோடு திரும்பிய 16 பேரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்தந்த சுகாதார துறையினர் தினமும் அவர் வீடுகளில் சென்று அவர்கள் உடல்நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Top