08/Jun/2021 12:29:37
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை அசோக் நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மருந்தாளுநர்கள் சங்கம் சமூக ஆர்வலர்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தினர்
கொரோனா இரண்டாம் அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உதவும் நோக்கில் புதுக்கோட்டை அசோக் நகர், பொன்னகர் பகுதிகளில் கப சூர கசாயம், முகக் கவசம் மற்றும், ஆவிபிடித்தல் கேப்சூல்கள், வைட்டமின் மாத்திரைகளை பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை புதுக்கோட்டை நகராட்சிஆணையர்(பொ) ஜீவாசுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
இதில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி,மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக், புன்னகை அறக்கட்டளை தலைவர் .கலைபிரபு, சமூக ஆர்வலர்கள் தனபால்,ஜெகன், செல்வராஜ், ஆர்சிஎம். தினேஷ், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.