logo
சிறந்த நூலகா்களுக்கு  முதல்வா் பழனிசாமி  விருதுகள் வழங்கினாா்

சிறந்த நூலகா்களுக்கு முதல்வா் பழனிசாமி விருதுகள் வழங்கினாா்

29/Nov/2020 08:56:57

சென்னை: பொது நூலகங்களில் சிறப்பாகச் சேவையாற்றிய நூலகா்களுக்கான விருதுகளை, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி  வழங்கினாா்.

 இதுகுறித்து, தமிழக அரசு  வெளியிட்ட செய்தி: ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறப்பாகச் சேவையாற்றும் நூலகா்களுக்கு டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டில் அரசு பொது நூலகங்களில் சிறப்பாகச் சேவையாற்றியமைக்காக 33 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.  இதற்கான தலைமைச் செயலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சில் 5 பேருக்கு விருதுகளை முதல்வா் பழனிசாமி  வழங்கினார்.

விருது அறிவிக்கப்பட்டோா் விவரம்:

ந.செசிராபூ (அரியலூா்), கோமதி (சென்னை), ஆா்.தாமோதரன் (கோவை), மு.அருள்ஜோதி (கடலூா்), ஆதிரை (தருமபுரி), வே.பாஸ்கா் (திண்டுக்கல்), கு.சதாசிவம் (ஈரோடு), தி.சுந்தரமூா்த்தி (காஞ்சிபுரம்), செ.ஜெரால்டு (கன்னியாகுமரி), ப.மணிமேகலை (கரூா்), சி.பழனி (கிருஷ்ணகிரி), அ.சுப்பிரமணியன் (மதுரை), கோ.நாகராஜன் (நாகப்பட்டினம்), சு.சந்துரு ( நாமக்கல்), வெ.அறிவழகன் (நீலகிரி), அ.தில்ஷாத் (பெரம்பலூா்), மா.துரைராஜ் (புதுக்கோட்டை), உ.நாகேந்திரன் (ராமநாதபுரம்), மா.சந்தோஷம் (சேலம்), வீ.சூரசங்கரன் (சிவகங்கை), பழனிவேல் (தஞ்சாவூா்), வெ.பால்ராஜ் (தேனி), அ.தனலட்சுமி (திருச்சி), ரவிச்சந்திரன் (திருநெல்வேலி), எஸ்.தங்கவேல் (திருப்பூா்), ச.ஞானப்பிரகாசம் (திருவள்ளூா்), சிவசங்கரன் (திருவண்ணாமலை), ஜெ.குமாரி (திருவாரூா்), பொன்ராதா (தூத்துக்குடி), க.வேலு (வேலூா்), கோ.தனுசு (விழுப்புரம்), வெள்ளைச்சாமி (விருதுநகா்), தமிழ்மணி (சென்னை, கன்னிமாரா நூலகம்) ஆகிய 33 நூலகா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையுடன் கூடியது இந்த விருது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.


Top