15/May/2020 07:08:03
புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி அருகே கல்லுாரி மாணவி கிணற்றில் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி அருகேயுள்ள கோவிலுார் சம்பாமனையைச் சேர்ந்தவர் பழனிவேலு மகள் சுமித்ரா (20). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சுமித்ராவின் தந்தை பழனிவேலுவிற்கும், தாயார் சித்ராவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சுமித்ரா வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு அருகேயுள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை குதித்துள்ளார்.
இதைப் பார்த்த அருகில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னர் சுமித்ராவை சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.