logo
மாவட்டத்துக்கு  2 அமைச்சர்களை நியமித்த முதல்வருக்கு திருவரங்குளம்  ஒன்றியக்குழு கூட்டத்தில்  நன்றி

மாவட்டத்துக்கு 2 அமைச்சர்களை நியமித்த முதல்வருக்கு திருவரங்குளம் ஒன்றியக்குழு கூட்டத்தில் நன்றி

26/Jun/2021 12:35:15

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 2 அமைச்சர்களை நியமித்த தமிழக முதல்வர் மு..ஸ்டாலினுக்கு  திருவரங்குளம் ஒன்றியக்குழுக்கூட்டத்தில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


திருவரங்குளம் ஒன்றியக்குழுக்கூட்டம்  தலைவர் வள்ளியம்மை தங்கமணி தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி பேசும்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சராக எஸ் ரகுபதி, சுற்றுசூழல் விளையாட்டுத்துறை அமைச்சராக சிவவி மெய்யநாதன் ஆகியோரை நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 மேலும் பதவியேற்ற உடன் கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ. 2000 முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 14 வகையான மளிகைப் பொருட்கள் மேலும் இரண்டாம் தவணை ரூ..2000 வழங்கியதற்கும்  மேலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின்  தீவிரத்தை கட்டுப்படுத்திட துரித நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கொத்த கோட்டை கருப்பையா, அதிமுக கவுன்சிலர் சிதம்பரம் ஆகியோர் ஒன்றிய குழு கூட்டத்திற்கு சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத் துறை உள்ளிட்ட இந்த துறைகளில் இருந்தும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதில்லை சுகாதாரம் மற்றும் மின்சார துறை பற்றிய குறைகளை நாங்கள் யாரிடம் தெரிவிப்பது அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்திற்கு வரவழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

 ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் மருத்துவத் துறை மின்சாரத் துறை உள்ளிட்ட  அனைத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. ஆனால் யாரும் வரவில்லை. அடுத்தகூட்டத்துக்கு கட்டாயம் வருமாறும் அழைக்கப்படுவார்கள் என விளக்கமளித்தார்.

மத்திய அரசின் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யும் உரிமை  ஊராட்சித்தலைவர்களுக்கா அல்லது ஒன்றிய கவுன்சிலர்களுக்கா என இருதரப்பினருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

திருவரங்குளம் ஒன்றியத்துக்கு மத்திய அரசிடமிருந்து  5,166 வீடுகள் கட்டுவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டதாகவும், தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

Top