logo
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்: புதுகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்: புதுகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

13/Nov/2020 06:33:20

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2021 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட  ஆட்சியர் .பி.உமாமகேஸ்வரி  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2021-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்படுகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6  சட்டமன்ற தொகுதிகளிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 16.11.2020 முதல் தொடங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர்  வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் மேற்கண்ட அலுவலகங்களில் வைக்கப்படும் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர் புகைப்படத்துடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா எனவும், தங்களது பெயர், விவரங்கள் புகைப்படம் ஆகியவை தவறின்றி உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம். 

மேலும் பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும்,  வாக்காளா; பட்டியலில்; பெயர் மற்றும் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-லிலும், ஒரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் படிவம் 8யு-லிலும் உhpய ஆவணத்துடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். 

மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 16.11.2020 முதல் 15.12.2020 வரை மேற்கண்ட வாக்குசாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரமும் 21.11.2020 (சனிக்கிழமை), 22.11.2020 (ஞாயிற்றுகிழமை), 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுகிழமை)   ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களின் போது காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை அளிக்கலாம். மேலும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10  மணிமுதல் மாலை 5.45 மணிவரை படிவங்கள் அளிக்கலாம். 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், தங்கள் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களை  எதிர்வரும் 21.11.2020 (சனிக்கிழமை), 22.11.2020 (ஞாயிற்றுகிழமை), 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுகிழமை)   ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் இணைந்து வாக்காளர்  பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் விபரங்களில் திருத்தம் முதலான கோரிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து படிவங்களை பெற்று ஆரோக்கியமான வாக்காளர் பட்டியல் வெளியிட தகுந்த அறிவுரை வழங்கவும்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உடனடியாக அதற்கான படிவத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி முகவர்களை (தொலைபேசி எண்ணுடன்) பூர்த்தி செய்து உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பொதுமக்களுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும்,  அலுவலகங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்க வரும்பொழுது கோவிட்-19 பாதுகாப்பு குறித்து, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும்  ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வெ.சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) கிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Top