logo
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள் ரூ.21.31 லட்சத்துக்கு ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள் ரூ.21.31 லட்சத்துக்கு ஏலம்

05/Dec/2020 07:26:09

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட  51 வாகனங்கள் ரூ.21.31 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 10  நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 41 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் ஈரோடு, 46 புதூர் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை பொது ஏலத்தில் விடப்பட்டன. 

முன்னதாக, வாகனங்களை ஏலம் எடுக்க சுமார் 200-க்கும் மேற்பட்டோர்  வந்திருந்தனர். இருசக்கர வாகனத்திற்கு ரூ. 2 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 4 ஆயிரம் என முன்பணம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, எஸ்பி தங்கதுரை ஏலத்தை தொடங்கி வைத்தார். கூடுதல் எஸ்பி பொன் கார்த்திக், டிஎஸ்பி சண்முகம் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.  

இதில், 6 சதவீத ஜிஎஸ்டி.,யுடன் 41 இருசக்கர வாகனங்கள் ரூ.7 லட்சத்து 41 ஆயிரத்து 131 க்கும், பத்து 4 சக்கர வாகனங்கள் ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்து 820-க்கும் என 51 வாகனங்கள் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 951க்கு ஏலம் விடப்பட்டன. வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள்  ஏலத் தொகையை உடனடியாக செலுத்தி பெற்றுக் கொண்டனர்.

Top