logo
ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயன்ற எல்.முருகன் உள்பட  1330 பேர் மீது வழக்கு பதிவு

ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயன்ற எல்.முருகன் உள்பட 1330 பேர் மீது வழக்கு பதிவு

21/Nov/2020 06:27:27

ஈரோடு: தமிழக பாஜகவினர் சார்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டம் என்பதால் இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி கடந்த நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணியில் யாத்திரை திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழக பா.ஜனதா கட்சியின்  தலைவர் எல். முருகன் தலைமையில் இந்த வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் ஓசூர் கிருஷ்ணகிரி கடலூர் சேலம் ஆகிய பகுதிகளிலும் தடையை மீறி வேல் அக்கறை நடந்தது. இதையடுத்து எல் முருகன் உள்பட ஆயிரக்கணக்கான பா.ஜனதா வினர் கைது செய்யபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்திலும் நேற்று பாஜவினர் சார்பில் வேலை யாத்திரை நடந்தது. இந்த யாத்திரைக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.  எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் ஈரோடுக்கு வந்தார்.

சென்னிமலையில் சுவாமி தரிசனம் செய்து ஈரோடு சம்பத் நகரில் நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து தடையை மீறி வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற எல். முருகன் உள்பட 1,330 பஜக வினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து, வீரப்பன் சத்திரம் போலீசார் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக எல்.முருகன் உட்பட 1330 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 425 பெண்களும் அடங்குவர்.

Top