31/Oct/2020 12:05:53
சேலம்: கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத்தலைமை நிலையம் வெளியிட்ட தகவல்: கோவில் பூசாரிகள் நலச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து 16- ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது..இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. நமது பூசாரிகளுக்கு அரசு அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்கு இதுவரை அரசாணை வெளியிடபடாமல் உள்ளது. இதனால் பூசாரிகள் ஓய்வூதியம், நலவாரியம் உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதைப் பற்றி விவாதிக்கக் கூடிய வகையில் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் இன்று நடைபெறுகிறது பொறுப்பாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பொறுப்பாளர் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு, மாநில பொருளாளர் கே. சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்..:
இடம்: புதுக்கோட்டை மேட்டுப்பட்டி காடப்பிள்ளை அய்யனார் கோவில் வளாகம். நாள்:
( 31.10.2020) சனிக்கிழமை. நேரம்: காலை 11 மணி.தொடர்புக்கு: மாவட்ட பொறுப்பாளர்கள்.. எஸ்.. பாலசுப்ரமணியம், எஸ். பழனிவேல், ஏ. கண்ணாயிரம், எஸ்.வி.சுப்புராமன்.அலைபேசி எண்: 94867 04176. 97860 23620.