logo
குளத்தூர்  அருகே  இளையாவயல் கிராமத்தில் சைல்டுலைன் 1098-ன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குளத்தூர் அருகே இளையாவயல் கிராமத்தில் சைல்டுலைன் 1098-ன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

30/Oct/2020 02:05:25

புதுக்கோட்டை மாவட்டம், குண்றாண்டார்கோவில் ஒன்றியம், குளத்தூர் ஊராட்சி, இளையாவயல் கிராமத்தில் புதுக்கோட்டை சைல்டுலைன் 1098-ன் சார்பில் விழிப்புணர்வ நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆ. ஜெயராணி மாயகிருஷ்ணன்  தலைமை வகித்தார். குண்றாண்டார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. பாண்டி செல்வி போஸ்முன்னிலை வகித்தார். குளத்தூர் வட்டாட்சியர்   பழனிச்சாமி சைல்டுலைன் 1098-ன் செயல்பாடுகள், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விளக்கவுரை அளித்தார்.  சைல்டுலைன் 1098-ன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ஆ. ஜோதிராஜ் குழந்தை திருமண தடை சட்டம் 2006 மற்றும் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம்  (POCSO ACT 2012)  என்ற தலைப்பில கருத்துரை வழங்கினார். 

நிகழ்ச்சியில், குண்றாண்டார்கோவில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேச பிரபு,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன், கீரனூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்  கவிதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நதியா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். கொரானா தொற்றிலிருந்து பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு (நல்ல தொடுதல்- தீய தொடுதல்) பற்றி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.

ஏற்பாடுகளை, சைல்டுலைன் 1098-ன் பகுதி பணியாளர்  கிருஷ்ணவேணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்  ஆகியோர் செய்திருந்தனர். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்க்கும் 350 பெண்கள், 40 ஆண்கள் மற்றும் 55 குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதா நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர்  சார்பில்  குளத்தூர் மற்றும் இளையவயல் பேருந்து நிறுத்தங்களில் சைல்டுலைன் 1098-ன் விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. 

Top