logo
தி.மு.க. கூட்டணியில் ஈஸ்வரனின் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் ஈஸ்வரனின் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

10/Mar/2021 08:57:36

சென்னை, மார்ச்: தி.மு.க. கூட்டணியில் கொங்கு  ஈஸ்வரனின் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணிகட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தையை ஓரளவு முடிவுக்கு கொண்டு வந்து விட்டன. பெரிய கட்சிகளுடன்  தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக சிறிய கட்சிகளுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பெரிய கட்சிகள் போல் அல்லாமல் சிறிய கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையை ஒரே நாளில் சுமுகமான முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவைக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கீடு திமுக ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் பிரதான கட்சியாக இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் கடந்த இரண்டு நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த சூழலில், திமுக -  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 3 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 இந்நிகழ்வில், ஈ.ஆர்.ஈஸ்வரன் (பொதுச்செயலாளர்) , சக்திகோச் நடராஜன் (துணை பொதுச்செயலாளர்,  பி.தங்கவேல் (துணை பொதுச்செயலாளர்),  எஸ்.சுரேஷ் பொன்னுவேல் (தலைமை நிலையச்செயலாளர்),எஸ்.சூரிய மூர்த்தி (மாநில இளைஞரணி செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதன் மூலம் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களுக்கான இடங்களை இறுதி செய்துள்ளன. 


Top