11/Mar/2020 06:54:44
தமிழக பாஜக தலைவராக
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த
அறிவிப்பை பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று
(மார்ச்.11) அறிவித்துள்ளார்.
பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு தமிழகத்தில் பாஜக தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. அந்த பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தேசிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணைத் தலைவராக பதவி வகித்து வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எல். முருகனை(43) பாஜக தமிழகத் தலைவராக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று அறிவித்துள்ளார்.