logo
புதுக்கோட்டை நகராட்சி  தணிக்கை அலுவலர் வீட்டில் 91 பவுன் நகைகள் திருட்டு: போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை நகராட்சி தணிக்கை அலுவலர் வீட்டில் 91 பவுன் நகைகள் திருட்டு: போலீஸார் விசாரணை

15/Apr/2021 01:15:47

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை நகராட்சியில் தணிக்கை அலுவலராகப் பணியாற்றும் பூரண வல்லி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 91 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும்  உண்டியல் பணமும் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்..

இவர் துக்கோட்டை, திருவப்பூர் சவுராஷ்டிரா தெருவில் வசித்து வருகிறார்.  கடந்த சில நாள்களுக்கு முன்பு  நமன சமுத்திரத்தில் உள்ள  தன் மகளின் பிரசவத்திற்காக சென்று விட்டு வியாழக்கிழமை  காலையில் வீடு திரும்பியுள்ளனர்

அப்போது,  வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு  அதில் வைத்திருந்த 91 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் பூஜை அறையில் இருந்த சுவாமி உண்டியலும் காாணாமல் போனது தெரியவந்தது..

இது குறித்து  பூரணவல்லி அளித்த தகவலின்பேரில் புதுக்கோட்டை டிஎஸ்பி செந்தில் குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த  வீட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் திருக்கோகரணம் போலீஸார் வழக்குப் பதிவு  வீட்டின்  பூட்டை உடைத்து  நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Top