logo
நெசவு தொழில் மேம்பாட்டுக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

நெசவு தொழில் மேம்பாட்டுக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

25/Mar/2021 05:31:41

ஈரோடு மார்ச்: ஈரோடு மாநகரில்  நடைபெறும் நெசவுத்தொழிலில் மேம்பாட்டுக்கு கூடுதல் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  நெசவாளர்களிடம் ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம் உறுதியளித்தார்.

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, ஜெகநாதபுரம் காலனி, பாரதிபுரம், அண்ணா வீதி, காந்திஜி வீதி, ராஜாஜி வீதி, சாஸ்திரி சாலை, சூரம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று  வாக்கு சேகரித்தார். 

அப்பகுதி வாக்காளர்களிடம், வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது: சூரம்பட்டி வலசு, வீரப்பன்சத்திரம், டீச்சர்ஸ் காலனி மற்றும் இதை சுற்றிய பகுதியில் நெசவாளர்கள் அதிகமாக உள்ளனர். திடீரென உயர்த்தப்படும் நுால் விலையை சரி செய்யவும், நெசவாளர்கள் வாழ்வாதாரம் உயரவும், அதிமுக தேர்தல் அறிக்கையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

நெசவாளர்களுக்கு தனியாக சங்கம் அமைத்து, அவர்களுக்கு தேவையான அளவு கடன் வழங்கி, நெசவு தளவாடங்களை மேம்படுத்த உதவிகள் வழங்கப்படும். சூரம்பட்டிவலசு பகுதியில் காய்கறி மார்க்கெட், பேருந்துகள் நின்று செல்ல தேவையான வசதிகள், சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். 

இப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த காவிரி குடிநீருக்கு பதிலாக, ஊராட்சிகோட்டையில் இருந்து கொண்டு வரப்படும் நீர் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் கூடுதல் தண்ணீர் இணைப்பு, புதிய குடிநீர் இணைப்பு தேவைப்படுவோருக்கு முழுமையாக வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும். இப்பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.இதுபோன்ற வசதிகளை மேம்படுத்த, இத்தொகுதியில் தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அவர்.

Top