logo
மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா

06/Mar/2024 08:34:11

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

 கீரமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்தவாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அம்மனே வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றுவந்தன.கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதி பெண்கள் குடங்களில் நெல்மணிகளை நிரப்பி, தென்னம்பாளைகளை வைத்து மலர்களால் அலங்கரித்த குடங்களை சுமந்தவாறு வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, கோயில் அருகே தென்னம்பாளைகளை வைத்துவிட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு திரவிய அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

 திருவிழாவில், மேற்பனைக்காடு, செரியலூர், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். கீரமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Top