03/Jul/2024 07:09:02
புதுக்கோட்டை:புதுக்கோட்டை
மாவட்டம், கறம்பக்குடி அருகே ரேசன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டவரை
புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதி பகுதியில்
ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை
காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டனர். அப்போது, வெட்டன்விடுதி பூக்காரத் தெருவைச் சேர்ந்த எஸ்.ஆனந்தகுமார்(45)
என்பவரது வீட்டில் 22 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது
தெரியவந்தது. தொடர்ந்து, அரிசி மூட்டைகள், பதிவு எண் இல்லாத மொபட் ஆகியவற்றை பறிமுதல்
செய்ததோடு, ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.