logo
நீதிமன்றப் பணியாளர்களுக்கு மன நல விழிப்புணர்வு முகாம்

நீதிமன்றப் பணியாளர்களுக்கு மன நல விழிப்புணர்வு முகாம்

15/Oct/2020 10:06:42

புதுக்கோட்டை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில்  நீதிமன்றப் பணியாளர்களுக்கு மன நல விழிப்புணர்வு முகாம் இன்று(15.10.2020) நடைபெற்றது.

 உலக மன நல நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு ஒருவாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில்  நீதிமன்றப் பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட மன நல விழிப்புணர்வு முகாமுக்குவிருந்தினராக மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மு. பூவதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தனதுஉரையில், அனைத்து விதமான மன நல அவசரச்சிகிச்சைகளுக்கும், ஆதரவற்ற மன நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சைகள் அரசு மருத்துவக்கல்லூரியில் வழங்கப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் மாவட்ட மனநல ஆலோசனை மையம் மூலமாக ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனை நீதிமன்ற பணியாளர்கள் நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், மாவட்ட மன நலத்திட்ட அலுவலர் டாக்டர் ரெ. கார்த்திக்தெய்வநாயகம் மன நலம், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும்மனநலம் மன அழுத்தம் தொடர்பாக அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

 மகளிர் நீதி மன்ற மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர் ஆர். சத்யா வரவேற்புரையாற்றினார்இறுதியில், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி என். உமாராணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை  மாவட்ட சட்டப்பணிகளை ஆணைக்குழு செயலர் எஸ். மகாலட்சுமி செய்திருந்தார்.

இதில், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள்  கமார் 50 பேர் கலந்து கொண்டனர்.இணைந்து செயல்படுவோம் மன நல பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவோம் என அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் மன நலம் குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

Top