logo
மேலப்பட்டி கிராம அறிவு மையத்தில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

மேலப்பட்டி கிராம அறிவு மையத்தில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

28/Jan/2021 06:38:13

புதுக்கோட்டை-ஜன: எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேலப்பட்டி கிராம அறிவு மையம் நடத்திய கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

 புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள மேலப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிராம அறிவு மைய மேலாண்மைக்குழு தலைவர் கே.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தார்.

 எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கிராம அறிவு மையங்கள் மூலம் கணினி பயிற்சி அளித்து வருகிறது. இதுவரையில் கிராமப்புறத்தை சேர்ந்த 2,800 பேர் கணினி பயிற்சி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையங்களில் முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளார்கள். 

கணினி அறிவு இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. கணினி அறிவு பெறவேண்டும் என்று விரும்பும் யார்வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் சேரலாம். இது 180 மணிநேர பாடத்திட்டம். கிராமப்புற சுய உதவிக்குழு பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட யார்வேண்டுமானாலும் இப்பயிற்சியில் சேரலாம்.

 பயிற்சி முடித்தவர்களுக்கு மேலும் திறன்களை வளர்த்து வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

 நிகழ்ச்சியில் அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் எ.பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் எஸ்.முருகேசன் மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் உறையாற்றினர்.

ஏற்பாடுகளை கிராம அறிவு மைய பணியாளர் கே.லெட்சுமி, ஆர்.வினோத் கண்ணா ஆகியோர் செய்திருந்தனர். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா வரவேற்றார். மேலாண்மைகுழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ் நன்றி கூறினார்.

Top