logo
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

23/Jun/2021 04:40:41

சென்னை, ஜூன்:  நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை  நிகழ்வாண்டில் நீட் தேர்வு நடைபெறுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து தமிழக முதல்வர் பேசியதாவது: பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது, நீட் தேர்வு வேண்டாம் என 4, 5 முறை வலியுறுத்தினேன். 2010-ஆம் ஆண்டில் விருப்பமுள்ள மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற போராடுவோம்; வெற்றி பெறுவோம். அதற்கு அதிமுகவும் துணை நிற்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்றோம், அதில் உறுதியாக உள்ளோம். நீதிபதி .கே.ராஜன் அளிக்கும் அறிக்கையை வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் பதிலளித்த பின், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகளுக்கு அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும் உறுதியளித்தார்.

 

Top