logo
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனோ விழிப்புணர்வு  உறுதி ஏற்பு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனோ விழிப்புணர்வு உறுதி ஏற்பு

07/Aug/2021 12:19:46

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்ட நல்வாழ்வு மற்றும் குடும்ம நலத்துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனோ விழிப்புணர்வு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதித்துறை சு. அமைச்சர் முத்துசாமி , இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் சி,என்,ராஜா ஆகியோர் கலந்து கொரோனோ விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கையொழுத்திட்டனர். 

பின்னர்,  இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் மருத்துவர் சி,என்,  ராஜா , செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனோ 2 -ஆவது அலை இன்னும் முடியவில்லை என்றும் , தடுப்பூசியை மக்களுக்கு  செலுத்து வேகத்தை அதிகப்படுத்தி விரைவாக அனைத்து மக்களுக்கும் கிடைக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் 3 -ஆவது அலை குழந்தைகள் , சிறுவர் சிறுமிகளை தாக்க அதிக வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் குழு தெரிவிப்பதால்  குழந்தைகள் , சிறுவர் , சிறுமிகளுக்கு தடுப்பூசியை செலுத்த அரசுகள் முன்வர வேண்டும். 3 -ஆவது அலையை குறித்து எவ்வாறு எதிர்கொள்வது குறித்து மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் , முதல் மற்றும் 2 ஆவது அலைகளிலும் இந்திய அளவில் 1200 மருத்துவர்களும் , தமிழகத்தில் 110 மருத்துவர்கள் கொரோனோ பாதித்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Top