logo
ஈரோட்டில்  லாட்டரி சீட்டு, குட்கா  விற்பனையை  தடுக்க வேண்டும்:  தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை

ஈரோட்டில் லாட்டரி சீட்டு, குட்கா விற்பனையை தடுக்க வேண்டும்: தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை

28/Feb/2021 07:16:53

ஈரோடு, பிப்: ஈரோட்டில் நடைபெற்றுவரும்  லாட்டரி சீட்டு, குட்கா  விற்பனையை  தடுக்க  நடவடிக்கை எடுக்கவேண்டுமென   தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார்.

 மாநில துணை செயலாளர் பாபு, கொள்கை பரப்பு துணை செயலாளர் ஸ்ரீசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் சாகுல்அமீது, கல்வி கண்காணிப்பு பிரிவு செயலாளர்  ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 இதில் நிறைவேற்றப்பட்ட  பிற தீர்மானங்கள்: வருகிற 21-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள நுகர்வோர் மாநாட்டில் பங்கேற்க ஈரோட்டில் இருந்து 1,000 பேர் செல்வது. ஈரோட்டில் நடந்து வரும் லாட்டரி சீட்டு, குட்கா போன்றவற்றை விற்பனை யை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் 240 நாட்கள் வேலை செய்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்த கூட்டத்தில் மாநில தொழிலாளர் அணி தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் குமரவடிவேல்,  ராஜேஸ், செயலாளர்கள் விஜயகுமார், கண்ணன், பொருளாளர் செபாஸ்டின், துணைத்தலைவர் மாரியப்பன், நிர்வாகிகள் காமாட்சி கண்ணன், மாதேஸ்வரன், செல்லபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Top