logo
இடுபொருள் விற்பனையாளர்களின் வேளாண் விரிவாக்க அறிவை மேம்படுத்த பயி்ற்சியளிக்கப்படும்

இடுபொருள் விற்பனையாளர்களின் வேளாண் விரிவாக்க அறிவை மேம்படுத்த பயி்ற்சியளிக்கப்படும்

31/Mar/2021 11:04:20


புதுக்கோட்டை, மார்ச்: இடுபொருள் விற்பனையாளர்களின் வேளாண் விரிவாக்க அறிவை மேம்படுத்த எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பயி்ற்சியளிக்கும் என்றார் அந்நிறுவனத்தின் விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்.

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி இணைந்து நடத்திய விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய அலுவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம் புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அறையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு முன்னோடி விவசாயி மா.திருப்பதி தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் மேலும் அவர் பேசியதாவது: பெரும்பாலான விவசாயிகள் தங்களது பயிர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனே அனுகுவது இடுபொருட்கள் விற்பனையாளர்களைத்தான். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பயிர் மருத்துவ முகாமை செயல்படுத்தி வருகின்றது. 

இடுபொருள் விற்பனையாளர்கள் பயிர் மருத்துவர்களை கலந்தாலோசித்த பின்பு உரிய இடுபொருள்களை வழங்கலாம். பயிர் மருத்துவர்களை விவசாய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம். தடைசெய்யப்பட்ட மற்றும் கட்டுபாடுகளுடன் பயன்படுத்தும் மருந்துகளை தவிர்ப்பது நஞ்சில்லா உணவையும் சுற்றுச்சூழலையும் பாதுக்காக்க உதவும். இடுபொருள் விற்பனையாளர்களின் வேளாண் விரிவாக்க அறிவை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க நடவடிக்கைக் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார். 

முன்னதாக வேளாண் அலுவலர் எஸ்.முகமது ரபி கலந்துரையாடலை தொடங்கி வைத்து பேசியதாவது:

விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தக்க தீர்லுவவுகளை வழங்க விவசாயிகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமான ஒன்றாகும். இடுபொருள் விற்பனையாளர்கள் இயற்கை வேளாண் இடுபொருள்களை விற்பனை செய்வதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் இயற்கை சார்ந்த இடுபொருட்களை காட்சிபடுத்த வேண்டும். எம். எஸ். சுவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் வேளாண் விரிவாக்க பணிகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. இடுபொருள் விற்பனையாளர்கள் மற்றும் விசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

நிகழ்ச்சியில், இடுபொருள் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதி ஜே.நீலகண்டன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் கே.சதாசிவம், மாவட்ட துணைத்தலைவர் எம்.வீரமுத்து ஆகியோர் பேசினர்.. எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா வரவேற்றார். நிறைவாக தொழில்நுட்ப அலுவலர் ஆர்.வினோத்கண்ணா நன்றி கூறினார்.

Top