logo
ஈரோட்டில் கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு

ஈரோட்டில் கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு

08/Nov/2020 12:57:03

ஈரோடு:  கோவை சரகத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்வு செய்யப்பட்ட ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் 7.11.2020 -அன்று காலை கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வில், கடந்த ஆண்டு பதிவான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், சாலை விபத்துகளை தவிர்க்க மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிசத்தை ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கோப்புகளை பார்வையிட்டார். 

மேலும், போலீஸ் ஸ்டேஷன் பராமரிப்பு, போலீசார் சீருடைகள் அணியும் வீதம் போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர், அனைத்திலும் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக டவுன் போலீஸ் ஸ்டேஷன் விளங்கி வருவதாகவும், முதல்வர் விருதுக்கு கோவை சரகத்தில் டவுன் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதை டி.ஐ.ஜி.நரேந்திரன் நாயர் உறுதி செய்தார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு எஸ்பி தங்கதுரை, ஏடிஎஸ்பி பொன் கார்த்திக்குமார், டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். 

                                                                               

        


Top