logo
விபத்தில் இறந்த மகனின் சாவில் மர்மம் உள்ளதாக  ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு

விபத்தில் இறந்த மகனின் சாவில் மர்மம் உள்ளதாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு

10/Feb/2021 05:53:37

ஈரோடு, பிப்: விபத்தில் இறந்த மகனின் சாவில் மர்மம் உள்ளதாக  எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர்.


ஈரோடு சூரம்பட்டி, அண்ணா வீதியைச் சேர்ந்த பால்ராஜ் தனது உறவினர்களுடன் திரண்டு வந்து  ஈரோடு எஸ். பி. அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

ஈரோடு  சூரம்பட்டி அண்ணா வீதியில் ஹோட்டல் நடத்தி வருகிறேன். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் பெயர் சின்னையா (27). மகனுக்கு  திருமணமாகி தாரணி என்ற மனைவியும் பிறந்து 40 நாட்களே  ஆன ஆண் குழந்தையும் உள்ளது. எனது மகன் சின்னையா நான் நடத்தும் ஹோட்டலை உடனிருந்து கவனித்து வந்தார்.

 

இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி எனது மகனுக்கு அவரது நண்பர் போன் செய்து பெருந்துறையில் உள்ள கோயிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவருக்கும் என் மகனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் எனது மகன் ஜனவரி 27-ஆம் தேதி  பிற்பகலில் கோயில் விசேஷத்திற்காக  வீட்டிலிருந்து சென்றான். இதையடுத்து, அன்று இரவு 9 மணியளவில் எனது மகன் போனில் இருந்து அவரது நண்பர் என்னிடம் தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு விபத்து நடந்து விட்டது என்று கூறினார். இதையடுத்து சிறிது நேரத்தில் போலீஸார்  போன் செய்து உங்கள் மகன் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உங்க மகன் உடல் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நாங்கள் பதறி அடித்துக்கொண்டு சம்பவத்தில் சென்றோம். எனது மகன் சென்ற மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றின் திட்டில் மோதி மகன் அடிபட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் என் மகனுடன் சென்றவர் எந்த ஒரு காயம் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது விபத்தல்ல எனது மகன் சாவில் மர்மம் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே தாங்கள் இதுகுறித்து விசாரித்து உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு  அவர்கள் அதில் கூறியுள்ளனர். இவர்களுடன் சின்னையாவின் மனைவி தாரணி  தனது  கைக்குழந்தையுடன் வந்திருந்தார்.

Top