27/Oct/2020 08:07:37
அறந்தாங்கியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை இன்று வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி வழிகாட்டுதலின்படி, அறந்தாங்கி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் வழங்கிய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை(UDID card)களை 47 மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில், உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பார்வதி, ஆசிரியர் பயிற்றுனர், இயன்முறை மருத்துவர், சிறப்பு ஆசிரியர்கள் செந்தில், சசிகலா பெரியநாயகி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.