logo
அமமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு:60 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

அமமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு:60 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

14/Mar/2021 09:29:32

அமமுகவுடனான தேமுதிக கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தேமுதிக சார்பில் புதுக்கோட்டை உள்பட 60 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார் அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. 

தனித்துப் போட்டியிடுவது குறித்தும் தேமுதிக ஆலோசனை நடத்தி வந்தது. இதனிடையே, அமமுகவுடன் தொகுதிப் பங்கிட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது. தற்போது தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேசமயம் தேமுதிக தலை விஜயகாந்த், துணை செயலர் சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் இந்த தேர்தல் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Top