26/Oct/2020 11:56:56
முருங்கையின் மருத்துவ குணத்தை இந்த பழமொழிக்குள்அடைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள் ஆனால், இதன் அர்த்தம் வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதை நாம் சரியான விளக்கத்தின் மூலம் புரிய வைக்கலாம்.
ஒருவர் முருங்கை மரத்தை வளர்த்தால் அதன் பூ, காய், இலை, பிசின் அனைத்தும் அவருடைய உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. முருங்கையை யார் உணவில் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையுடன் நடந்து செல்வார் என்பதே இந்தத் தலைப்பின் அர்த்தம். ஆகவே, நம்முடனே தினமும் வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய முருங்கையை பயன்படுத்தி உடல் நலத்தைப் பேணிக்காப்போம்.