27/Oct/2020 02:20:56
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகள் அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளில்எல்.கே.ஜி. வகுப்பில் மழலைகள் சேர்த்து கொள்ளப்பட்டனர். விஜயதசமி என்பதால் பெற்றோர்கள் பலரும் மழலைகளை பள்ளியில் சேர்த்தனர். பள்ளியில் சேர்ந்த மழலைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இதே போல, புதுக்கோட்டை அடுத்து பால் பண்ணை அருகே உள்ள வெங்கப்பய்யர் ஊற்று அங்கன்வாடியில் விஜயதசமியையொட்டி புதிதாக கல்வி கற்க வந்த குழந்தைகளுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் எழுத வைத்து பயிற்சி அளிதனர்.