logo
செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் விஜயபுரத்தில்  ரூ.25 ஆயிரம்  செலவிவல் குடிதண்ணீர் கிணறு சீரமைப்பு

செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் விஜயபுரத்தில் ரூ.25 ஆயிரம் செலவிவல் குடிதண்ணீர் கிணறு சீரமைப்பு

26/Sep/2020 06:33:50

புதுக்கோட்டை அருகேயுள்ள  விஜயபுரத்தில்   குடிதண்ணீர்  கிணறு  பராமரிப்பு இல்லது பழுதடைந்து இருந்ததது குறித்து தகவலறிந்த   புதுக்கோட்டைசெஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினர் அந்தக்கிணற்றை ரூ.25 ஆயிரம் செலவில்   சுத்தம் செய்து, சுற்றுசுவர் கட்டி பொதுமக்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர். புதுக்கோட்டை விஜயபுரத்தில் ஊராட்சித்தலைவர் மஞ்சுளா முத்தையா, செயலர்  அரவிந்த் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்ற நிகழ்வுக்கு  தலைவர்  புவனேஸ்வரி  தங்கமாளிகை நிறுவனர் எஸ் . நடராஜன் தலைமை வகித்து பராமரிப்புப்பணிகள் நிறைவேற்றப்பட்ட குடிநீர்க்கிணற்றை  பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையடுத்து மரக்கன்றுகள் நடவு செய்து பொதுமக்களுக்கு முகக்கவசம்,கபசரக்குடிநீர்  வழங்கப்பட்ட்டது. இதில்,   செஞ்சுரி  லயன்ஸ் சங்கம்  நிர்வாகிகள், சங்க நிறுவனர் கண்ணன்,மரம்ராஜா,ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ்,  துணைத்தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்  பொருளாளர் சேது. கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் நிறைவில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உருவப்படத்தை திறந்து வைத்து அனைவரும் அஞ்சலி செலுத்தினர். 


Top