25/Apr/2020 05:48:14
புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில்,ஆலங்குடி நகர் பகுதியில் பல்வேறு கடைகளை திறந்து தடையை மீறி வியாபாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி தலைமையிலான அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது,வடகாடு முக்கம், கடைவீதி உள்ளிட்ட பகுதியில் பர்னிச்சர் கடை,வெல்டிங் பட்டறை,மின்மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை கடை ஆகியவை திறக்கப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்துவந்தது தெரியவந்துள்ளது.இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த மூன்று கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.