logo
 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 38 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களுக்கு 5 மாதம் ஊதியம் வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 38 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களுக்கு 5 மாதம் ஊதியம் வழங்க கோரிக்கை

09/Nov/2020 11:30:27


புதுக்கோட்டை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனரிடம்  வழங்கப்பட்ட கோரிக்கை மனுவிவரம்:.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில் பணியாற்ற ரூபாய் 40,000 மாத ஊதியத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

தற்போது பணிபுரிந்து வரும் 38 -க்கும் மேற்பட்ட தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை ஊதியமின்றி தொடர்ந்து கால்நடை மருந்தக அன்றாட பணிகளை மற்றும் திட்ட பணிகள் அனைத்தும் உரிய காலத்தில் செய்து முடித்து பணியாற்றிவரும் கால்நடை உதவி மருத்துவர் களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்கப்படாததால் இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

மேலும், தீபாவளி பண்டிகை தற்சமயம் நெருங்கிவரும் சூழ்நிலையில் வெகுவிரைவில் கால்நடை உதவி மருத்துவர் களுக்கு  நிலுவையில் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் இனி வரும் காலங்களில் மாத ஊதியம் உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனுவாக  நேற்று தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் இளங்கோவிடம் கோரிக்கை மனு வழங்கினர். 

மேலும் இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால்  அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வரும் 18-ஆம் தேதி புதன்கிழமை அன்று மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து கால்நடை உதவி மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து  புதுக்கோட்டை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். 


Top