logo
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீத மாடுகள் விற்பனை

01/Jan/2021 10:29:21

ஈரோடு, டிச : ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமைதோறும் மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு வரத்தாகும் மாடுகளை ஈரோடு மட்டும் அல்லாது தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும், , கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம்  போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்து வாங்கி செல்வார்கள்.

இந்நிலையில், இன்று கூடிய சந்தையில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து 800 மாடுகள் வரத்தானது. இதில், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம், தேனி ஓமலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கால்நடை பாரமரிப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில் கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கி சென்றனர்

இதுகுறித்து மாட்டுசந்தை நிர்வாகிகள் கூறியதாவது: இந்த வாரம் கூடிய சந்தையில் பசு-450, எருமை-250, கன்று-100 என 800 மாடுகள் வரத்தானது. இதில், பசு மாடு ரூ.30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், எருமை மாடு  ரூ .30 ஆயிரம் முதல் ரூ.45ஆயிரம் வரையும், கன்று ரூ.10ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன.

தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், தேனி ஓமலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மாடுகளை வாங்கி கொடுத்தனா். இதன்காரண மாக இந்த வாரம் சந்தைக்கு வரத்தான மாடுகள் 85 சதவீதம் விற்பனையானதாக அவர்கள் கூறினார்.

Top