logo
ஈரோட்டில் காவலர் வீர வணக்க நாள்- 60 குண்டுகள் முழங்க மலர் அஞ்சலி

ஈரோட்டில் காவலர் வீர வணக்க நாள்- 60 குண்டுகள் முழங்க மலர் அஞ்சலி

21/Oct/2020 08:11:44

ஈரோட்டில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு  பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க, மலர்வளையம் வைத்து இன்று(அக்.21)அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த போலீஸாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் நேற்று வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. இதில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த 262 போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு, 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, ஈரோடு எஸ்பி தங்கதுரை, உயிர்நீத்த போலீசாஸாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், ஏடிஎஸ்பி கனகேஸ்வரி, டிஎஸ்பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து,  மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார், ஆயுதப்படை போலீஸாரின் குறை தீர் கூட்டமும் நடந்தது.

Top