logo
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

29/Mar/2021 10:58:12

ஈரோடு, மார்ச் :மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்  என்று அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதியளித்தார்.

  ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் , சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, இந்து நகர், லட்சுமி கார்டன், பழையபாளையம், சுத்தானந்தன் நகர் ஆர்ச் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு  வாக்கு  சேகரித்தார்.

அப்போது வாக்காளர்களிடம், வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. ஈரோட்டில் மேம்பாலம், ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம், பெருந்துறை மருத்துவ கல்லுாரி அரசு கல்லுாரியாக மாற்றம், பஸ் ஸ்டாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அரசு தலைமை மருத்துவமனையை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்துதல், காளிங்கராயன் விருந்தினர் மாளிகை முதல் திண்டல் மேடு வரை ரூ.300 கோடியில் மேம்பாலம், கனி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் போன்றவற்றுக்கான பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், பல திட்டங்கள் திட்ட வரைவு நிலையில் உள்ளன. தவிர, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு, பெண்களுக்கு மாதம், 1,500 ரூபாய், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு, சமூக நலத்துறை ஓய்வூதியத்தை மாதம் ரூ.2,000  என உயர்த்தி வழங்குதல் போன்ற திட்டங்களை நிறைவேற்ற  இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் கே.வி. ராமலிங்கம். 


Top