logo
புதுக்கோட்டை சமத்துவம் அறநிலையம் சார்பில்  மாற்றுத்திறனாளிகளுக்கு  நிவாரண உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை சமத்துவம் அறநிலையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் அளிப்பு

21/May/2021 05:55:23

புதுக்கோட்டை, மே: முழு ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்  நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு புதுக்கோட்டை சமத்துவம் அறக்கட்டளை சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப் பட்டன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம்   நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் முழு முடக்கம்  அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று புதுக்கோட்டையிலும் முழுமுடக்கம்  அமல்படுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக  புதுக்கோட்டை நகரில்  தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை சமத்துவம் அறநிலையத்தின் தலைவர் . நைனாமுகமது தலைமையில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு    சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது.

Top