logo
சத்தியமங்கலம் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

சத்தியமங்கலம் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

16/Oct/2020 10:58:41

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.‌ இவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது அவரது தோட்டத்தை சுற்றியுள்ள  முள் வேலிஅருகே  மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 தகவலறிந்த  சத்தியமங்கலம்  வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி  பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட  மலைப்பாம்பை  பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். 

Top