logo
கோபியில் ரூ.1.71 கோடியில் நலத்திட்ட உதவிகளை தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

கோபியில் ரூ.1.71 கோடியில் நலத்திட்ட உதவிகளை தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

16/Dec/2020 02:11:05

ஈரோடு - டிச: கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் ஆட்சியர். சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 968 பயனாளிகளுக்குரூ.1கோடியே 71 லட்சம் மதிப்பிலானநலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்வழங்கிப் பேசியதாவது:


 ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 155 பயனாளிகளுக்கு இலவச வீட்டுப் மனைப்பட்டா 218 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் 556 பயனாளிகளுக்கு மின்னணு குடும்பஅட்டை 16 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி 3 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டார் வாகனம் என மொத்தம் 968 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 55 ஆயிரத்து 474 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டஉதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

 இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கும் அரசாகவும் ஏழை எளியமாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் அரசாகவும் திகழ்கிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளி ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் 405 மாணவர்களுக்கு மருத்துவகனவை நிறைவேற்றிய அரசாக உள்ளது. 

இதற்காக  ரூ.16 கோடி ஒதுக்கிமருத்துவம் பயிலமற்றும் தங்கும் விடுதி கட்டணத்தையும் அரசேஏற்றுக்கொண்டுள்ளது. ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவை நனவாக்கியதன் மூலம்   வேறு எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத முயற்சிகளை தமிழகஅரசு செய்து வருகிறது. 

தமிழகஅரசின் வேகத்தையும் விவேகத்தையும் பார்த்து அனைவரும் அஞ்சி நடுங்கும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. தமிழகஅரசு ஏழை எளியமக்களுக்காகப் பணியாற்றும் அரசாக உள்ளது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.  இவ்விழாவில் மாவட்டவருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் தியாகராஜு, நிலவருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Top