15/Jul/2021 09:31:25
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்ட ஜூனியர் ரெட்கிராஸ், மரம் நண்பர்கள் சார்பில் பெற்றோரை இழந்துவாடும் 4 சிறுவர்களுக்கு நலத்திட உதவி அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த செய்யானம் கிராமத்தில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு சிறுவர்களுக்கு, அறந்தாங்கி வட்ட ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர்களுடன், புதுக்கோட்டை மரம் நண்பர்களும் இணைந்து, ரூ 5000 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப்பொருள்களும், ரூ 4500 மதிப்புள்ள ஆடைகள், பாய், தலையணை போன்ற பொருள்களை மாவட்ட கல்வி அலுவலர் கு. திராவிடச் செல்வம் முன்னிலையில் வழங்கப்பட்டது.
நிகழ்வில், மீமிசல் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமு, ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் பூ. தமிழ்ச் செல்வன், இணை ஆலோசகர் ஆ.யோகேந்திரன், பட்டதாரி ஆசிரியர்கள் ஜீசஸ் ஜெய்சங்கர், விநாயமூர்த்தி, ராஜேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் செய்யானம் கிராமத்திற்குச் சென்று கள நிலைமையை அறிந்து சிறுவர்களுக்கு உதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.