16/Oct/2020 04:18:57
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சி மற்றும் சலங்கபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட 600-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விலையில்லா அசீல் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் இன்று வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கோழிக்குஞ்சுகளின் தரம் குறித்து அமைச்சர் கருப்பண்ணன் ஆய்வு செய்தார்.அதில் குஞ்சுகளின் தரம் குறிப்பிடப்படும்படி இல்லாததை உணர்ந்த அமைச்சர், பயனாளிகளுக்கு வழக்கும் குஞ்சுகள் தரமானதாக இருக்கவேண்டும் என்றும், இந்த கோழிக்குஞ்சுகளை பயனாளிகளுக்கு வழங்கினால் அவர்கள் வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் போதே பாதிக்குஞ்சுகள் இறந்துவிடும் நிலையில் உள்ளதால் எப்படி மக்கள் பயன்பெறமுடியும் என்றும் இனிமேல் வழங்கும் கோழிக்குஞ்சுகள் தரமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்..
அதனை தொடர்ந்து போதிய வளர்ச்சியும், ஆரோக்கியமும் இல்லாத கோழிக்குஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டு தரமான கோழிக்குஞ்சுள் மட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில்,கால்நடை பராமரித்துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்க அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.