logo
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்ட தொடக்கவிழாவுக்கு முதல்வர் வருகை: அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்ட தொடக்கவிழாவுக்கு முதல்வர் வருகை: அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை

17/Feb/2021 07:40:12

புதுக்கோட்டை, பிப்:    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகைதர உள்ளதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

 

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் துவக்க விழாவிற்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டை திருவப்பூரில்  நடைபெற்றது.

 

பின்னர் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவதுபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவுத் திட்டம் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமாகும். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று இத்திட்டத்தை நிறைவேற்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

 அதன் பயனாக இத்திட்டத்தை ரூ.7000 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கு ஏற்கெனவே ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலமெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு டெண்டர் பணிகளும் முடிவுற்றுள்ளது.

                அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க காவிரி-வைகை-குண்டாறு  இணைப்புத் திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் வருகின்ற  வெள்ளிக்கிழமை 21.02.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அவா;கள் நோpல் வருகை தந்து அடிக்கல் நாட்டி இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளாh;கள். இதன்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அவா;கள் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

                இவ்விழா நடைபெறும் இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைத்தல், தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், விழாவில்  கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமரும் இடம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கவும், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                மேலும் இவ்விழாவில் பொதுமக்கள் எளிதாக கலந்து கொள்ளும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 1 லட்சம் பேர்  கலந்து கொண்டு முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட உள்ள வரலாற்று சிறப்புமிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்ட விழா பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

 கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர்(பொ) ஜீவாசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் .பாஸ்கர், முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி, வேளாண் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top