logo
மருத்துவராக களம் இறங்கி நோயாளிக்கு  அவசர சிகிச்சையளித்த  சட்டமன்ற உறுப்பினர்..!

மருத்துவராக களம் இறங்கி நோயாளிக்கு அவசர சிகிச்சையளித்த சட்டமன்ற உறுப்பினர்..!

28/May/2021 06:35:41

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோா வார்டை பார்வையிடச்சென்ற  எம்எல்ஏ-வும் மருத்துவருமான முத்துராஜா  அங்கிருந்த நோயாளிக்கு அவசர முதலுதவி  சிகிச்சையளித்து  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்று நோயாளிகளை வெள்ளிக்கிழமை பார்வையிடச் சென்ற  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்  வை.முத்துராஜா  அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளியைப் பார்த்தவுடன்  மருத்துவமனை ஊழியர்களிடம் அவசரமாக   பிபி கிட் உடையை பெற்று அணிந்து (CPR) முதலுதவி செய்தார். இந்த நிகழ்வு அங்கே இருந்த நோயாளிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும்  வியப்பையும்  மனதளவில் தைரியத்தையும் உருவாக்கியது.

Top