logo
ஆவுடையார்கோயில் அருகேயுள்ள நூற்பாலையை அரசுச்செயலர் ஆய்வு

ஆவுடையார்கோயில் அருகேயுள்ள நூற்பாலையை அரசுச்செயலர் ஆய்வு

15/Oct/2020 01:38:07

புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார்கோயில் அருகே துரையரசபுரத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையை அரசு செயலாளர்  ஷம்பு கல்லோலிகள் இன்று ஆய்வு செய்தார்.

 சென்னை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அரசு முதன்மை செயலாளரும், புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஷம்புகல்லோலிகர்,துணை இயக்குநர் கிரிதரன், துணை ஆட்சியர் ஆனந்த்மோகன், மேலாண்மை இயக்குநர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் இந்த  ஆலையை ஆய்வு செய்தார்..ஆய்வின்போது, வட்டாட்சியர் மார்டின் லூதர்கிங்,ஊராட்சி தலைவர் ராதிகா ஆகியோர் உடனிருந்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகள் தாய் மாதவன், தங்கசாமி,சுப்பையா, அறிவழகன், செல்வராசு, ராஜா, வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், செந்தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன், புவனேஸ்வரி உதவியாளர் கவிரோசா உஷா, கலைமாறன் தியாகராசன், சங்கர்  உள்ளிட்டோர்  உடனிருந்தனர். 


Top