logo
புதுக்கோட்டை அறிவியல் இயக்கம்-சண்முகநாதன் பொறியியல் கல்லூரி இணைந்து  நடத்திய இணையவழி குழந்தைகள் அறிவியல் மாநாடு

புதுக்கோட்டை அறிவியல் இயக்கம்-சண்முகநாதன் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய இணையவழி குழந்தைகள் அறிவியல் மாநாடு

14/Jan/2021 06:23:46

புதுக்கோட்டை, ஜன: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் கிளையும், புதுக்கோட்டையை அடுத்த அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் இணைந்து 28-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை இணைய வழியில் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

மாநாட்டிற்கு அறியவில் இயக்க மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார். மாநாட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி தொடங்கி வைத்தார். சண்முகநாதன் பொறியியல் கல்லூரி முதல்வர் குழ.முத்துராமு வாழ்த்திப் பேசினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் சிறந்த 10 ஆய்வறிக்கைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. மோகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஓவியா, அக்கச்சிப்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா, வெள்ளாளவிடுதி உயர்நிலைப்பள்ளி மாணவி ராஜகுமாரி, மேலூர் உயர்நிலைப்பள்ளி மாணவி பவிதா, ஒடப்பவிடுதி நியூட்டன் துளிர் இல்ல மாணவி சிவராணி, புதுக்கோட்டை ஏபிஜே துளிர் இல்ல மாணவன் சபரிவாசன், வடசேரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கோபிநாத், புதுக்கோட்டை ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காமாட்சி, வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சின்னையா, ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவன் சங்கரநாராயண் ஆகியோர் மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான இளம் விஞ்ஞானிகளைப் பாராட்டி அறிவியல் இயக்க மாநில செயலாளர்கள் அ.அமலராஜன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் வெ.சுகுமாறன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் லெ.பிரபாகரன், அ.மணவாளன், க.உஷாநந்தினி, நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் ம.வீரமுத்து, ஈ.பவனம்மாள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ராமதிலகம், எம்.சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறைத் தலைவர் எம்.வரதராஜன் நன்றி கூறினார்.


Top