logo
நாட்டில் முதன்முறையாக விவசாயிகளுக்காக நல வாரியம்- கேரள அரசு அறிவிப்பு

நாட்டில் முதன்முறையாக விவசாயிகளுக்காக நல வாரியம்- கேரள அரசு அறிவிப்பு

08/Oct/2020 05:47:10

நாட்டில் முதன்முறையாக கேரளத்தில் விவசாயிகளுக்காக நல நிதிய வாரியம் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளாவில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக கேரள கர்ஷகா ஷேமநிதி வாரியம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

நாட்டின் முதல்முறையாக விவசாயிகளுக்காக அமைக்கப்படும் நல நிதிய வாரியத்தின் தலைவராக டாக்டர் பி. ராஜேந்திரனை நியமிக்கவும் சட்டப்பேரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயம் மட்டுமல்லாமல், தோட்டப்பயிர், மருத்துவ தாவர சாகுபடி நாற்றங்கால் மேலாண்மை, மீன், அலங்கார மீன், தேனீக்கள், பட்டுப்புழுக்கள், கோழி, வாத்துகள், ஆடுகள், முயல்கள், கால்நடைகள் மற்றும் நிலத்தை பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவற்றிற்காக இந்த நலவாரியம் அமைக்கப்பட உள்ளது. இந்த வாரியத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுவதற்கு உறுப்பினர் கட்டணம் ரூ.100 -ம், பின்னர் மாத சந்தாவாக ரூ.100 -ம் கொடுக்க வேண்டும். மாதம் தவறாமல் சந்தா செலுத்த இயலாத விவசாயிகள் 6 மாதங்களுக்கு ஒருமுறையும் சந்தாவை செலுத்தி நலவாரியத்தின் பயன்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பில் ஒவ்வொரு விவசாயியிக்கும் மாதம் ரூ.250 வரை ஒதுக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 


Top