logo
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குக் உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டம்: முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குக் உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டம்: முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

25/Jun/2021 03:46:28

சென்னை, ஜூன்: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும்  வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குக் உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும்  முதலமைச்சர் மு..ஸ்டாலின் வெள்ளிக்கிழமை(25.6.2021) தொடக்கி வைத்தார்


தமிழ்நாடு கட்டுமானத் தொழிலர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர் களுக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்திட. வேண்டும் என்ற ஆணைக்கிணங்க முதல் கட்டமாக 2 லட்சம் கட்டுமானத்  தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினையும்


கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பணி வாய்பை இழந்த குடும்ப அட்டை இல்லாத புலம் பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் பசியால் வாடக் கூடாது

என்ற உயரிய எண்ணத்தோடு 1 29,444 தொழிலாளர் களுக்கு 6 கோடியே 66 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் மதிப்பில் 15 கிலோ அரிசி 1 கிலோ துவரம் பருப்பு  1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய  உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் ( 25.6.2021) நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். சண்முகம், தமிழச்சி தங்கபாண்டியன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமார், தொழிலாளர் துறை ஆணையர்   வள்ளலார். தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குதர் எம்.வி. செந்தில்குமார். அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Top