18/Mar/2020 08:16:49
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
ஆர்டிஒ அலுவலகங்களில் மார்ச் 31வரை எல்எல்ஆர், லைசன்ஸ் பெற தடைவிதித்து தமிழக போக்குவரத்துதுறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறையில்
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை
கூட்டம் மாநகர போக்குவரத்து கழக தலைமையக கருத்தரங்கு கூட்டத்தில் நடந்தது. அப்போது
ஆர்டிஒ அலுவலகங்களில் மார்ச் 31வரை எல்எல்ஆர், லைசன்ஸ் பெற தடைவிதித்து தமிழக போக்குவரத்துதுறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மேலும் பேருந்துகளை தூய்மையாக வைத்துக்கொள்ளவும்,
கிருமி நாசினிகளை பேருந்தில் தெளிக்க வேண்டும் எனவும், ஓட்டுனர் நடத்துனர்கள் முககவசம்
அணிந்துகொள்ளவும் கேட்டுக்கொண்டார்.