logo
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயிகளைச் சந்தித்த கனிமொழி

புதுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயிகளைச் சந்தித்த கனிமொழி

30/Jan/2021 06:21:24

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக எம்பி. கனிமொழி புதுக்கோட்டையிலுள்ள உழவர் சந்தையில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடினார்.

. அங்கு கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் விவசாயிகளிடமும்  காய்கறிகள் வாங்குவதற்கு வந்திருந்த பொதுமக்களிடமும் குறைகளை  கேட்டறிந்தார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூரியதாவது: உழவர் சந்தைகள் தற்போது பெயரளவிற்கு தான் செயல்பட்டு வருகிறது.உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இன்னும் மூன்று  மாதத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் இவர்களது  குறைகள் தீர்த்து வைக்கப்படும் என்றார்


முன்னதாக மாவட்ட திமுக அலுவலத்தில் நிறுவப்பட்டுள்ள திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் கனிமொழி. இதில், மாவட்ட பொருப்பாளர்கள் எஸ். ரகுபதி எம்எல்ஏ, கே.கே. செல்லப்பாண்டியன், எம்எல்ஏ-பெரியண்ணன்அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் அடிக்கல் முதல்வர்  என்றார் திமுக எம்பி கனிமொழி:

 தமிழர்களின் அடையாளங்களை மத்திய அரசிடம் அடகு வைத்து. தங்களுடைய ஊழல் குற்றச்சாட்டுகளி இருந்து தப்பிப்பதற்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார் கனிமொழி எம்பி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையிலிருந்து திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தேர்தல் பிரசாரம்  மேற்கொண்டு மக்களை சந்தித்து  வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை  காலை புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சடி பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கனிமொழி  மேலும் பேசியதாவது:
இங்கு அதிக அளவில் கூட்டம் கூடியுள்ளதை  பார்க்கும்போது வரும் தேர்தலில் திமுக  வெற்றி பெற்று விட்டும்  என்பதை  உணர்த்துவதாகவே  நான் கருதுகிறேன். 10 வருடங்களாக யாருக்கும் பயனில்லாத ஆட்சியாகவே இந்த ஆட்சி  நடந்து வருவதால் மக்கள் சலிப்படைந்து வெறுப்படைந்து நிலையில் உள்ளனர்.

தமிழர்களின் அடையாளங்களை டெல்லியில் அடகுவைத்த ஆட்சி தான் இந்த ஆட்சி. பொறியியல் பட்டதாரிகள் உட்பட பல பட்டதாரிகள் கூலிவேலை மற்றும் துப்புரவு பணிகளுக்கு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அந்த அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எந்த தொழில் முதலீடும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை.
புதிதாக எந்த தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களும் இந்த ஆட்சியின் அவல நிலை கண்டு மற்ற மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கைகள் கொடுப்பதால்தான் சிறு சிறு வேலைகள் கூட இந்த ஆட்சியில் நடைபெற்று வருகிறது. ஆனால் முதலமைச்சர் அடிக்கல் நாயகனாக தான் இருக்கிறார்.திட்டத்திற்கு அடிக்கல் மட்டுமே  நாட்டுகிறார்களே தவிர அந்த திட்டத்தை முடிப்பதற்கு நடவடிக்கைகள் இல்லை.தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் வைக்கக் கூடிய ஒரே கோரிக்கை ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்பதுதான்.ஆனால் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள  விஜயபாஸ்கர் தனது  துறைக்கும் தனது சொந்த மாவட்ட  பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை.

பேப்பரில் தான் தூர் வருகிறோம் என்று வருகிறதே தவிர உண்மையாக குடிமராமத்து  பணிகளில் தூர்வாருவது கிடையாது கணக்கு மட்டும் தான் எழுதப்படுகிறது.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இது உள்ளது.ஆண்களுக்கும் தான் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தான் இதற்கு சாட்சி.

மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியில் தன்னை மற்றும் தனது அமைச்சர்களை செய்த ஊழல்களை மறைப்பதற்காக தங்களை பாதுகாப்பதற்காக தமிழர்களின் அடையாளங்கள் தமிழ் மொழியை மத்தியில் அடகு வைத்து தன்னுடைய அமைச்சர்களின் நலனுக்காகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது, தங்களது அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தங்களது கட்சி தமிழர்களின் அடையாளம் ஆகியவற்றை மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டு செயல்படுகிற ஆட்சி தான் இந்த அதிமுக ஆட்சி  என குற்றம்சாட்டினார் கனிமொழி.
 




Top