logo
ஈடிசியாவில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈடிசியாவில் கொரோனா தடுப்பூசி முகாம்

16/Apr/2021 08:59:27

ஈரோடு ஏப்; ஈரோடு மாவட்ட தொழில் மையம், ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா) சார்பில், இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜி.திருமுருகன், ஈடிசியா தலைவர் திருமூர்த்தி, செயலாளர் ராம்பிரகாஷ் ஆகியோர் முகாமை தொடக்கி வைத்தனர். 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அரசு டாக்டர்கள் சிபிஅரசு, ஆர்த்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர், 216 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில், துணைத் தலைவர் பி.கந்தசாமி, பொருளாளர் பழனிவேல், முன்னாள் தலைவர்கள் சரவணன், வெங்கடேஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Top