logo
ஜூம் செயலி மூலம் பாலைவனம் நூல் வெளியிட்டு விழா

ஜூம் செயலி மூலம் பாலைவனம் நூல் வெளியிட்டு விழா

02/Sep/2021 11:24:24

ஈரோடு: தமிழறிஞரும், 25 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள  ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மவுலானா, சங்க இலக்கியமான ஐங்குறு நூறு நூலின் பாலை பாடலுக்கு பாலை வனம் என்ற தலைப்பில் விளக்கவுரை எழுதியுள்ளார்.  இந்த நூல் வெளியீட்டு விழா, ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கம் சார்பில், குவியம் செயலி  மூலம்  நடந்தது.

விழாவுக்கு அஸ்ஸயித் மஸ்ஊத் மவுலானா அல்ஹாதீ  தலைமை வகித்து, முதல் நூல் பெற்றுக்கொண்டார். சங்க செயலாளர் கவிஞர் கிளியனூர் இஸ்மத் வரவேற்றார்.  நிகழ்ச்சியில், தலைவர் கலீபா, ஆலிம்புலவர் எஸ் ஹூஸன் முகம்மதுமன்பயீ, தமிழ் அறிஞர்கள் வா.மு.சேதுராமன், இலங்கை கலாபூஷணம் டாக்டர் ஞானசேகரன், சிங்கப்பூரை சேர்ந்த  மா. அன்பழகன், அப்துல்காதர், சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் நத்தர்ஷா, முனைவர் சேக் அப்துல்லாஹ் ஜமாலி ஆகியோர் பேசினர்.

 பேராசிரியர் முரளி அரூபன்,  முனைவர் சஹாப்தீன் மற்றும்  தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்  குவியம் செயலி மூலம் நிகழ்ச்சியை கண்டனர்.

Top